துருக்கி நாட்டில் கடந்த 2016 ஜூலை 15 ஆம் தேதி, நடந்த தோல்வியடைந்த இராணுவப் புரட்சி நினைவு கூறும் வகையில் “ஜனநாயக மற்றும் தேசிய ஒற்றுமை தினம்” இன்று ஜூலை 15 ஆம் திகதி 15 ஆண்டுகள் நினைவு நாள் அனுஷ்டிக்கப்படுகிறது.
அந்த வகையில் கொழும்பில் உள்ள துருக்கிய துாதுவர் செமிஹ் லுத் ருஹூட் (Semih Luttu Turgut) அவர்களின் அழைப்பின் பேரில் கொழும்பு ஹமீத் அல் ஹூசைனியா தேசிய பாடசாலையின் உயர் தர 50 மாணவர்களும் அதிபர் எம்.ஆர்.எம். றிஸ்கீ, ஆங்கில பாட ஆசிரியர்கள் இருவரும் கலந்து கொண்டனர்
தூதுவரின் கொழும்பு வோட் பிளேசில் உள்ள அலுவலக இல்லத்தில் 15.07.2025 நடைபெற்றது. இங்கு வருகை தந்த சகல மாணவர்களுக்கும் துருக்கி மாலைதீவுக்கான துாதுவர் பகற்போசனமளித்து அவர்களுடன் கருத்துக்களையும் இலங்கை, துருக்கி நட்புறவு வரலாறுகளையும் பரிமாறிக் கொண்டார்.
அத்துடன் துாதுவர், இராணுவப் புரட்சி முறியடிப்பது மற்றும் சம்பவங்கள் சம்பந்தமான புகைப்படக் காட்சிகள் மாணவர்களுக்கு காண்பித்து துாதுவர் விளக்கவுரை நிகழ்த்தினார்.
-அஷ்ரப் ஏ சமத்