உலகம்

துருக்கி இராணுவ விமானம் ஜோர்ஜியாவில் விபத்து

துருக்கியின் C-130 ரக இராணுவ சரக்கு விமானம் ஒன்று ஜோர்ஜியாவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விபத்து இடம்பெற்ற போது விமானத்தில் பணியாளர்கள் உட்பட 20 இராணுவ அதிகாரிகள் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

துருக்கி பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த விமானம் அசர்பைஜானில் இருந்து புறப்பட்டுத் துருக்கி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

விமான விபத்தில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் – 10 பேர் பலி

நிலக்கரிச் சுரங்க வாயுக் கசிவால் குறைந்தது 52 பேர் பலி

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி