உள்நாடுபிராந்தியம்

தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் PSDG வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தும்பங்கேணி அரச கால்நடை வைத்தியசாலையின் புனரமைப்பு திட்டத்திற்கான ஆரம்ப வேலைகள் இன்றைய தினம் ( 03 ) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச ஒருங்கிணைப்பு குழு தலைவர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந் நிகழ்விற்கு சிறப்பு அதிதிகளாக கால்நடை வைத்தியர் Dr. கதீஸ்காந் யதுஷனா , விவசாயம், கால்நடை, நீர்ப்பாசன அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர், சுற்றுலா துறை அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் வாணி செல்லப்பெருமாள் , மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள், தும்பங்கேணி கிராம அபிவிருத்தி சங்கத்தினர், காந்திபுரம் கிராம அபிவிருத்தி சங்கத்தினர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

பொது மன்னிப்பு கைதிகளின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிப்பு 

அமைச்சரவையின் பின்னர் விமான நிலையம் திறக்கும் சாத்தியம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 433 ஆக உயர்வு