உள்நாடு

துப்பாக்கி, தோட்டாக்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒருவர் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் புறப்படல் முனையத்தில் தனது ஜாக்கெற் பையில் துப்பாக்கி, 12 தோட்டாக்களை மறைத்து வைத்திருந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இரத்மலானை பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய தொழிலதிபர் ஆவார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் ஒரு பயணியை இறக்கி விடுவதற்காக வந்த இந்த தொழிலதிபரே முனையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ சார்ஜென்ட் ஒருவரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

மலையகம் 200 நிகழ்வு தவறென கருதினால், நடைபயணமும் தவறுதான் – ஜனாதிபதி சந்திப்பின் பின் ஜீவன்

நாமல் எம்.பியை அவசர அவசரமாக சந்தித்த முன்னாள் அமைச்சர்களும் எம்.பிக்களும்!

editor

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்