சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

(UTV|COLOMBO) – அக்மீமன – மானவில பகுதியில் பாடசாலை ஒன்றிற்குள் பலவந்தமாக நுழைய முற்பட்ட நபர் ஒருவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான குறித்த நபர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த 39 வயதுடைய குறித்த நபர் கராப்பிட்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்று அனுமதிக்கப்பட்ட போது அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்

இலங்கை அணிக்கு 290 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

ஜனாதிபதி 20 அன்று சாட்சியம் வழங்க இணக்கம்