உள்நாடு

துப்பாக்கிச் சூட்டில் மாகந்துர மதுஷ் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) –  பிரபல பாதாள உலகக் குழுத்தலைவரும் போதைப்பொருள் கடத்தல்காரருமான மாகந்துர மதுஷ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

மாளிகாவத்தை வீட்டுத் தொகுதியில் கிலோகிராம் ஹெரோயின் இருப்பதாக தெரியவந்ததை அடுத்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் மாகந்துர மதூஷை குறித்த பகுதிக்கு அழைத்துச் சென்றபோது பொலிஸாருக்கும் பாதாள உலகக் குழுவினருக்கும் இடையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்போது மாகந்துரே மதுஷ் உயிரிழந்ததுடன், இரண்டு காவற்துறை கான்ஸ்டபிள்கள் காயமடைந்த நிலையில், கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது அங்கிருந்து 22 கோடி ரூபா பெறுமதியான 22 கிலோ கிராம் ஹெரோயின், இரண்டு துப்பாக்கிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பங்குச்சந்தை பூட்டு

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு

பல்கலைக்கழ பரீட்சைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு