சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டில் ஐ.தே.க. உறுப்பினர் கபில அமரகோன் காயம்

(UTV|COLOMBO) பெலியத்த பல்லத்தர – மோதரவான பகுதியிலுள்ள வீட்டின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பெலியத்த பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் கபில அமரகோன் காயமடைந்துள்ளார்.

அவரின் வீட்டில் வைத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த பிரதேச சபை உறுப்பினர் சிகிச்சைக்காக தங்காலை வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

 

Related posts

நீதி கோரி சுமந்திரன் – கலாய்க்கும் டக்ளஸ்

மட்டக்களப்பு வரையான புகையிரதம் பொலன்னறுவை வரை ஸ்தம்பிதம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக பலத்த பாதுகாப்பு