உள்நாடு

துசிதவின் கைத்தொலைபேசியைக் CID யிடம் ஒப்படைக்க உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டு பணிப்பாளர் துசித ஹல்லோலுவவின் கைத்தொலைபேசியைக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 17 ஆம் திகதி நாரஹேன்பிட்டி பகுதியில் அவரது கார் மீது நடதப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், மேலும் அவர்களிடம் விசாரணை இடம்பெறுகிறது.

இந்தச் துப்பாக்கிப் பிரயோகம் துபாயில் மறைந்திருக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இரண்டு லட்சம் ரூபாவுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் தீர்மானம் இல்லை

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

editor

இன்று இரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor