உள்நாடு

தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலம்

ஹபரணை பகுதியில் தீப்பிடித்த கெப் வண்டிக்குள் சடலமொன்று காணப்பட்டுள்ளது.

ஹபரணை, மின்னேரிய வீதி 39,வது மைல்கல் பகுதியில் நேற்று இரவு கெப் வண்டியொன்று தீப்பிடித்துள்ளதுடன், பொலன்னறுவை தீயணைப்பு பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

விசாரணையில் காருக்குள் சடலம் ஒன்று இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் கெப் வண்டியின் உரிமையாளர் என சந்தேகிக்கப்படுவதுடன், வண்டியின் பின் இருக்கையில் சடலம் காணப்பட்டுள்ளது.

கெப் வண்டியின் உரிமையாளர் தெகட்டன பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், இது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் மின்னேரிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

குடிவரவு – குடியகல்வுத் திணைக்கள நடவடிக்கைகள் திங்கள் முதல் ஆரம்பம்

மாணவர் உயிர்களைப் பாதுகாப்போம் – பல்கலைக்கழக துணை கலாசாரம் என்று அழைக்கப்படுவதை எதிர்ப்போம்!

editor

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு