உள்நாடுபிராந்தியம்

தீப்பிடித்து சாம்பலாகிய வீடு – கோரகல்லிமடுவில் சோகம்!

குடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று இவ்வாறு தீப்பிடித்து சாம்பலாகியுள்ளது.

இந்த சம்பவம் வீட்டில் பயன்படுத்திய எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த தீ சம்பவத்தில் குடிசை வீடும், அங்கிருந்த பொருட்களும் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளன.

குறித்த இடத்துக்குச் சென்ற வாழைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் தற்போதைய உறுப்பினருமாமான கே.கமலநேசன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, உலருணவுப் பொருட்களை வழங்கி வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-எச்.எம்.எம்.பர்ஸான்

Related posts

முட்டை விலை இன்னும் குறைக்கப்படவில்லை – பேக்கரி உரிமையாளர்கள்

கண்டியில் மண்சரிவு – மூவர் பலி – 17 பேரை காணவில்லை

editor

இம்முறை O/L பரீட்சைக்கு அமரும்போது முகக்கவசம் கட்டாயமில்லை