உள்நாடு

தீபாவளியை முன்னிட்டு மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை

தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு மறுதினமான எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் மத்திய மாகாண ஆளுநருக்கு விடுக்கப்பட்ட ஆலோசனைக்கமைய மேற்படி தீபாவளி தினத்திற்கு மறுநாளான எதிர்வரும் 21 ஆம் திகதி மத்திய மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைக்கு விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தினால் மத்திய மாகாண கல்வித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-சிவா ஸ்ரீதரராவ் இரத்தினபுரி நிருபர்

Related posts

புத்தளம், வென்னப்புவ பகுதியில் பாடசாலை வேனுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor

செயற்பட முடியாவிட்டால் பதவி விலகுங்கள் – ஜனாதிபதியிடம் சஜித் கோரிக்கை.

மாகாண சபைகளை கைப்பற்றுவோம் விரைவில் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம் – தயாசிறி ஜயசேகர எம்.பி

editor