சூடான செய்திகள் 1

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு இம்மாதம் 24ம் திகதி…

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை சுருக்கமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கு முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதி எடுக்கும் நடவடிக்கை தொடர்பில் இம்மாதம் 24ம் திகதி அறிக்கை சமர்பிக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று(04) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி காலத்தில் தவறான ஆவணம் ஒன்றை தயாரித்து, அதனை ஊடகங்களுக்கு வெளியிட்டமை தொடர்பில், திஸ்ஸ அத்தநாயக்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

திருகோணமலை – மட்டக்களப்பு தபால் ரயில் சேவை இரத்து

திரைப்பட பாணியில் ATM பண மோசடி

களனிவெளி புகையிரத சேவைகள் தாமதம்.