சூடான செய்திகள் 1

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான வழக்கு மார்ச் மாதம் ஒத்திவைப்பு

(UTV|COLOMBO) ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் மார்ச் 25ம் திகதி அழைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பிரதிவாதியின் சட்டத்தரணி விடுத்த கோரிக்கை்கு அமைவாக இம்மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் மார்ச் 10 ஆம் திகதி வரை திஸ்ஸ அத்தநாயக்க வௌிநாடு செல்வதற்கும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

 

 

 

Related posts

கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் இடையில் வாகன நெரிசல்

வீதி மின்குமிழ்கள் முகாமைத்துவ வேலைத்திட்டம்

இராணுவ வண்டி புகையிரதத்துடன் மோதிய விபத்தில் 06 இராணுவ வீரர்கள் உயிரிழப்பு (UPDATE)