உள்நாடு

திவுலப்பிட்டிய தொற்றாளர் 400 பேருடன் தொடர்பு

(UTV | கொழும்பு) – கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த தொற்றாளர் சுமார் 400 பேருடன் தொடர்பில் இருந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை PCR பரிசோதனைக்காக அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது மினுவாங்கொடை மற்றும் திவுலப்பிட்டிய பிரதேசங்களுக்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்றைய கலவரத்தில் இதுவரையில் 45 பேர் கைது

வில்பத்து விவகாரத்தில் தீர்ப்புக்கு எதிராக ரிஷாத் உயர் நீதிமன்றில் மேன்முறையீடு [VIDEO]

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை