உள்நாடு

திருத்த பணிகள் காரணமாக சில வீதிகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) – பாலம் திருத்த பணிகள் காரணமாக வெல்லம்பிட்டிய, ஒருகொடவத்த, அம்பத்தலே வீதி ஆகியன இன்று(04) மற்றும் நாளை(05) வரை ஏழு மணித்தியாலங்கள் வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அம்பத்தலே பிரதான வீதியில் அமைந்துள்ள புத்கமுவ இரும்பு பாலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த பணிகள் காரணமாகவே குறித்த வீதியை மூடவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று மற்றும் நாளை இரவு 10.00 மணி முதல் அதிகாலை 5.00 வரை இந்த வீதி மூடப்படவுள்ளதுடன், இந்த காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் வாகன சாரதிகளை கேட்டுள்ளனர்.

Related posts

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

நார்கோர்டிக் அதிகாரிகள் 13 பேருக்கும் விளக்கமறியல்

குறைந்த வயதினை உடைய சுமார் 100 ஜோடிகள் கைது