அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

திருடர்களைப் பிடிப்போம் என்கிறார் பிரதமர் ஹரிணி

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் எவராவது ஊழல் மோசடியுடன் தொடர்புபட்டிருந்தால், பாரபட்சங்கள் எதுவுமின்றி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டிலிருந்து ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்த பிரதமர், ஊழல் மோசடிகள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (06) பிரதமருடனான கேள்வி நேரத்தின் போது,

ஐக்கிய மக்கள் சக்தி எம்பி சமிந்த விஜேசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமிந்த விஜேசிறி எம். பி தமது கேள்வியின் போது,

கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூண்டு மோசடி, சீனி மோசடி மற்றும் தேங்காய் எண்ணெய் மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தபோதும், அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டார்.

அத்துடன் அரசாங்கம் கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதுபோன்று, தற்போதைய அரசாங்கத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை மேற்கொள்ளுமா? என்றும் கேள்வியெழுப்பினார்.

குறிப்பாக கடந்த காலத்தில் இடம்பெற்ற வெள்ளைப்பூடு மோசடிக்கு சமமானதாக இந்த அரசாங்கத்தில் உப்பு மோசடி இடம்பெற்றுள்ளது.

அதேபோன்று சீனி மோசடிக்குச் சமமாக கொள்கலன்கள் விடுவிப்பு மோசடி இடம்பெற்றுள்ளது.

இந்த மோசடிகள் தொடர்பிலும் அரசாங்கம் முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமா என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பிரதமர் தொடர்ந்தும் பதிலளிக்கையில்,

எமது அரசாங்கம் ஊழல் மோசடிகள் தொடர்பில் நேர்மையாக விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் தொடர்பில், விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

எமது அரசாங்க காலத்தி மாேசடிகள் இடம்பெற்றாலும் விசாரணை நடத்தப்படும்.

இதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. நாட்டுக்குள் ஊழல் எதிர்ப்பு கலாசாரம் ஒன்றை ஏற்படுத்தும் உண்மையான முயற்சியையே தற்போது மேற்கொள்கிறோம்.

இந்த முயற்சியிலும் தவறான நடவடிக்கைகள் இடம்பெறுமானால், அவர்களுக்கு எதிராகவும் செயற்பட்டு, திருடர்களைப் பிடிப்போம் என்றார்.

Related posts

புதிய அமைச்சரவை கூட்டம் நாளை ஒத்திவைப்பு

இலங்கையை உலகில் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் – ஜனாதிபதி அநுர

editor

மீண்டும் பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்?