அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் இன்று (09) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
அம்பாறை மாவட்ட அரச புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வம்மியடி பகுதியின் ஊடாக செல்லும் பரந்த ஆற்றுப் பகுதியில் காணப்படும் மரம் ஒன்றின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் உறுதிப் பாகங்கள் சிலவற்றை பொலிசார் மீட்டுள்ளனர்.
மேலும், குறித்த இடத்தில் விடுதலைப் புலிகளின் முகாம் இருந்ததாகவும், மேலும் பல ஆயுதங்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோயில் பொலிசார் மேற்கொண்டு வருகின்றன.
-தில்சாத் பர்வீஸ்