உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை, குச்சவெளியில் பெண்ணின் சடலம் மீட்பு!

திருகோணமலை,குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சலப்பையாறு பகுதியின் திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியோரத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை (12) காலை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 56 வயதுடைய பெண் ஆவார்.

இவர் வியாழக்கிழமை (11) இரவு அயலில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்வதாக தனது வீட்டவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றதாக அவரது பிள்ளைகள் கூறியுள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. எனினும் இது ஒரு விபத்தாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் புதிய பதில் செயலாளராக வேதநாயகம் ஜெகதீசன் நியமனம்

editor

பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி

மாவனல்லை – 36 பேரும் மீண்டும் விளக்கமறியலில்