உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலை கடற்கரையில் பெருமளவிலான சிவப்பு நண்டுகள் கரையொதுங்கல்

திருகோணமலை உட்துறைமுகவீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருகின்றன.

இவற்றில் பல நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடன் காணப்படுகின்றன.

கடந்த மூன்று நாட்களாக தொடர்ச்சியாக இச்சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதற்கான காரணம் இதுவரை தெரியாதென மீனவர்களும் பொதுமக்களும் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் பல்வேறு கடற்கரைப் பகுதிகளிலும் அண்மைக்காலமாக இதுபோன்று சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கும் நிகழ்வுகள் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

-முஹம்மது ஜிப்ரான்

வீடியோ

Related posts

தேங்காய் எண்ணெய்க்கு பதிலாக சோயா எண்ணெய்

தனிமைப்படுத்தல் விதி : 50,000 ஐ கடந்த கைதுகள்

கப்ராலுக்கு வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை நீடிப்பு