சூடான செய்திகள் 1

தியத்தலாவ பஸ் வெடிப்பு சம்பவம்; ஐவர் அடங்கிய குழு நியமனம்

(UTV|COLOMBO)-தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய ஐவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அதபத்து கூறியுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரும் தனியான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த பஸ்ஸில் கைக்குண்டு ஒன்று வெடித்ததனாலேயே பஸ் தீப்பற்றி எரிந்ததாக இரசாயண பகுப்பாய்வு திணைக்களமும் உறுதி செய்திருந்தது.

நேற்று முன்தினம் அதிகாலையில் தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தால் 19 பேர் காயமடைந்திருந்தமை கூறத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

வெடிப்பு சம்பவங்களை விசாரணை செய்ய இன்டர்போல் இலங்கைக்கு

நிதியமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார் பிரதமர் மஹிந்த

அரசியல் அமைதியின்மை எதிர்வரும் வாரம் முழுமையாக நிறைவுக்கு கொண்டு வரப்படும்