சூடான செய்திகள் 1

திண்ம உணவுப் பொருட்களுக்கும் வர்ண குறியீட்டு முறை

(UTV|COLOMBO) மென்பானங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட வர்ண குறியீட்டு முறை, திண்ம உணவுப் பொருட்களுக்கும் அமுல்படுத்த சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

சீனி, உப்பு, எண்ணெய்யுடன் கூடிய உணவுப் பொருட்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் மக்கள் தொற்றா நோய்களால் பாதிக்கப்படுவதை, கவனத்தில் கொண்டு சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன மென்பான போத்தல்களுக்கான வர்ண குறியீட்டு முறையை அறிமுகம் செய்துள்ளார்.

இதன்படி, ஆகக் கூடுதலான சீனி அடங்கியுள்ள உணவுப் பொருட்களுடன் தொடர்புடைய லேபிள்களில் சிவப்பு நிறக் குறியீடு இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உணவுச் சட்டத்திற்கு அமைய குறித்த ஐந்து வர்ண குறியீட்டு முறை நேற்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

தெரிவிக் குழு உறுப்பினர்கள் விபரம் – சபாநாயகர் தெரிவிப்பு

எதிர்வரும் 17ம் திகதி அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட்டை சீர்திருத்த அலி சப்ரி அழைப்பு!