உள்நாடுபிராந்தியம்

திடீரென மயங்கி விழுந்த 11 வயது பாடசாலை மாணவி மரணம்

திடீரென மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்த சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு இறந்தவர் கெக்கிராவைச் சேர்ந்த 11 வயது பாடசாலை மாணவி என தெரிவிக்கப்படுகிறது.

மாணவி பாடசாலை முடிந்து பேருந்தில் சென்ற போது திடீரென மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார்.

இதன்போது பாடசாலை பேருந்து ஊழியர்கள் அவ​ரை கெக்கிராவை வைத்தியசாலையில் துரிதமாக அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்த போதும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

உடல் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனை நடத்திய போதிலும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, மரணத்திற்கான காரணத்தை கண்டறிய உடல் பாகங்கள் இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்பப்பட்டு, சிறுமியின் உடல் பாதுகாவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Related posts

செம்மணி மனிதப் புதைகுழியில் மேலும் 6 புதிய எலும்புக்கூடுகள் அடையாளம்

editor

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor

பேருந்துகள் வழமை போல் சேவையில் : இ.போ.ச