உலகம்

திடீரென தீப்பிடித்த விமானம் – அலறியடித்து ஓடிய பயணிகள்

அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

இதனால் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை ஏற்பட்டது.

பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் 6 பயணிகள் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான போயிங் MAX 8 விமானத்திலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

Related posts

விண்வெளிக்கு செல்லும் முதல் அரபு பெண்

உலக அளவில் 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்

இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடை நீடிப்பு

editor