அரசியல்உள்நாடு

திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்போர் இறைவனுக்கு பதிலளிக்க வேண்டியவரும் – சுயேட்சை முதன்மை வேட்பாளர் றுக்சான்

முஸ்லிம் விரோத போக்கை அரசு கைவிடாமல் ஜனாதிபதியை முஸ்லிம் பிரதேசங்களுக்கு அழைத்து வருவதில் பயன் இல்லை என்பதை தேசிய மக்கள் சக்தியின் முஸ்லிம் செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். என அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் ஒட்டகச்சிவிங்கி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவின் முதன்மை வேட்பாளர் எம்.எம். றுக்சான் மக்கள் சந்திப்பின்போது தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆரம்பித்த காலமிருந்து இதுவரை முஸ்லிம்கள் மீதான புறக்கணிப்பு தொடர்கிறது.

கிழக்கு மாகாண சபை நிர்வாக விடயத்தில் ஆரம்பித்த புறக்கணிப்பு அமைச்சரவையில் முஸ்லிம்களுக்கான இடம் தரப்படாமல் அதன் பின்னர் அனைத்து விடயங்களிலும் தொடர்கிறது.

அண்மையில் இஸ்ரேலுக்கு எதிராக றுஸ்தி எனும் இளைஞர் ஸ்டிகர் ஒட்டினார் என்பதற்காக 90 நாட்கள் பயங்கரவாத தடுப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

அதே வேளை பாலஸ்தீன மண்ணில் குண்டு மழை பொழிந்து உடல்கள் சிதறுகின்ற காட்சிகளையும் ஓலங்களையும் காண்கிறோம் பயங்கரவாதியான கொலைகாரனுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞரை கைது செய்ததன் ஊடாக இந்த நாட்டில் முஸ்லிம்களை அரசு கேவலப்படுத்தி இருக்கிறதா?

எம்மை இன்னும் முட்டாள்களாக்க திசைகாட்டி முனைவது எதற்காக என புரியவில்லை? ஓரின சேர்க்யைாளர்களது விடயம், இஸ்லாமிய திருமணச் சட்டத்தின் மீதான காய்நகர்த்தல் என்பனவும் முஸ்லிம்கள் மீதான இஸ்லாத்தின் மீதான பாரிய செயற்பாடுகளாகும்.

எனவே, இவை தொடர்பில் தேர்தலுக்காக அல்ல படைத்த இறைவனிடமும் நாம் திசைகாட்டிக்கு வாக்கு சேகரிப்பதனால் பதில் சொல்ல வேண்டி வரும் என செயற்பாட்டாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

எரிபொருள் விலை சூத்திரம் அமைச்சரவைக்கு

நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படவுள்ள பகுதிகள்

சர்வதேச இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரண கண்காட்சியை பார்வையிட்ட சஜித்

editor