அரசியல்உள்நாடு

திசைகாட்டிக்கு இன்னும் இந்தக் கொலைக் கலாச்சாரத்தை இல்லாதொழிக்க முடியாது போயுள்ளது – சஜித் பிரேமதாச

மக்கள் ஆதரவில் அதிகாரத்தைக் கைப்பற்றியவர்கள் தான் இன்று சுகபோகங்களை அனுபவித்து வருகின்றனர். சமூகத்தில் கொலை கலாச்சாரம் முழு நாட்டையும் ஆக்கிரமித்துள்ளன.

பிரதேச சபைத் தவிசாளரால் பொது மக்கள் தினத்தை கொண்டு நடத்தவோ, நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்கவோ முடியாத நிலை எழுந்துள்ளது. மனித உரிமை மீறல்கள் எல்லா இடங்களிலும் நடைபெறுகின்றன.

அரசாங்கத்தின் இயலாமையினால் இந்நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது போயுள்ளன. காட்டுச் சட்டம் கோலோச்சி, பாதாள உலகம் ஆளும் சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் எப்போதும் மக்களுக்கு பொய்யான எதிர்பார்ப்புகளையே வழங்கி வந்தன. இருக்கும் மக்கள் நம்பிக்கையையும் அளித்து வருகிறது.

இன்று பொய்களும் ஏமாற்று வேலைகளும் மட்டுமே நடந்து வருகின்ற எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் நடமாடும் சேவை வேலைத்திட்டம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டம் என்பவற்றின் மற்றுமொரு கட்டம் நேற்று (25) இரத்தினபுரி மாவட்டம், இறக்குவானைத் தேர்தல் தொகுதி, வெலிகெபொல வட்டாரத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்நாட்களில் சீரற்ற காலநிலைக்கு மத்தியில், சிரமங்களை எதிர்கொண்ட குறித்த பிரதேச தேவையுடைய மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகளையும் வழங்கி வைத்தார்.

IPhone, Internet, Google என்பவற்றை பயன்படுத்தி நமது நாட்டில் மக்கள் சேறுபூசும், அவமதிக்கும், கேலி செய்யவும் செயற்பாடுகளையே செய்து வருகின்றனர்.

இன்றைய உலகில், மக்கள் AI மற்றும் Chatgpt என்பவற்றைப் பயன்படுத்தி அறிவைத் தேடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Drone, AI என்பவற்றை பயன்படுத்தி, உலகில் விவசாயத்தில் முன்னேறியுள்ளது என நான் கூறும் போது, Facebook​​ வழியாக சேறு பூசுகின்றனர்.

கடந்த காலங்களில், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து தகவல் தொழிநுட்ப அறிவு, ஆங்கிலம் மொழியாற்றால் குறித்து நான் பேசி வந்த போது என்மீது சேறு பூசினர்.

அன்று தன் மீது சேறுபூசியவர்கள் இன்று சர்வதேச சமூகத்தின் முன் தங்கள் கருத்துக்களை முன்வைக்கும்போது சரியான ஆங்கில பிரயோகத்தைப் பயன்படுத்த முடியாது தடுமாறுகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நமது நாட்டின் கல்விமுறை நவீனமயமாக்க வேண்டும். குறுகிய மனப்பான்மை மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். 193 நாடுகளுடனும் ஒவ்வொரு துறையிலும் நாமும் போட்டி போட வேண்டும்.

இதில் நாம் வெற்றி காண வேண்டும். இதன் பொருட்டு அறிவையும் நுட்பங்களையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள 10,126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவ்வாறு அரச பாடசாலைக் கட்டமைப்பில் பயிலும் பிள்ளைகளுக்கு கணினி தொழில்நுட்பம், ஆங்கிலம், சீனம், இந்தி, ஜப்பான் மொழிகள் போன்றவற்றைக் கற்பிக்க வேண்டும் என நான் தெரிவிக்கும் போது என்னைப் பார்த்து பரிகசிப்போர்களது
பிள்ளைகள், தனியார் பாடசாலைகளுக்கும், சர்வதேச பாடசாலைகளுக்கும், தனியார் பல்கலைக்கழகங்களிலுமே கல்வி கற்று வருகின்றனர்.

அரச பாடசாலைகளில் படிக்கும், தொலைதூரப் பகுதிகளில் உள்ள பிள்ளைகளுக்கு இத்தகைய நவீன கல்விப் போக்குகளை கொண்டு சேர்க்கும் போது, சில தரப்பினர் பொறாமைப்படுகின்னர்.

தமது சொந்தப் பிள்ளைகளுக்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் ஆங்கில வழி கல்வியைப் பெற்றுக் கொடுப்பதை நல்லதாக கருதுவோர், நாட்டில் உள்ள ஏனைய பிள்ளைகளும் அதைக் கற்றுக்கொள்ள வேண்டும் எனக் கூறி, கல்வியில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை இல்லாமலாக்க, எதிர்க்கட்சியில் இருந்து கொண்டே நாம் எடுத்த முயற்சிகளைப் பார்த்து பரிகசித்து சமூக ஊடகங்களில் சேறு பூசும் நடவடிக்கைகளை எம்மீது மேற்கொண்டு வந்தனர்.

தற்போதும் அதனையே செய்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி நமது நாட்டில் விவசாயத்தை முன்னேற்றம் காணச் செய்யலாம் என நான் கூறும் போதும் அதற்கும் கிண்டல் செய்து சேறு பூசுகின்றனர்.

நவீன தொழிநுட்பங்களைப் பயன்படுத்தி விவசாயத் துறையில் நெதர்லாந்து முன்னேற்றம் கண்டுள்ளது.

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம், குறிப்பிட்ட நிலப்பரப்பில் அதிக அறுவடைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்

editor

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை