கிசு கிசு

திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 21ம் திகதி திங்கள் முதல் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சேவையில் உள்ள பேரூந்து சாரதிகள் சேவையில் இருந்து விலகி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து சேவைகள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பேரூந்து ஒழுங்கையில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றை உட்சேர்ப்பது தொடர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்தே குறித்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளது.

பேரூந்து ஒழுங்கையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை உட்சேர்வதால் குரிஹ்த ஒழுங்கையில் சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் அதிகளவான நேரம் நிற்க வேண்டியிருக்கும் எனவும் சங்கத்தின் தலைவர் தெரிவித்திருந்தார்.

இதனால் பேரூந்துகளில் பயணிக்கும் பயணிகள் பேரூந்திலிருந்து இறங்கி செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

அரசியலில் இருந்து ஓய்வு பெரும் ரதன தேரர்

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்…

சீனாவில் இருந்து இறப்பர் அரிசா?