உள்நாடு

தீர்வின்றேன் திங்கள் முதல் தனியார் பேரூந்துகள் இல்லை

(UTV | கொழும்பு) – VAT உட்பட பல வரிகள் அதிகரிக்கப்பட்டுள்ளமையால் பேரூந்து தொழிற்துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், எதிர்காலத்தில் மீண்டும் பேரூந்து கட்டணத்தை அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக குறிப்பிட்டார்.

பஸ் தொழிற்சங்கம் தொடர்பான இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் அனைத்து தனியார் பேருந்துகளும் சேவையில் இருந்து விலகுவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

பதவிகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை வைத்திருந்தால் வழக்கு

வீடியோ | பொலிஸார் துரத்திச் சென்றமையால் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி – வவுனியாவில் சம்பவம்

editor

இஸ்ரேலுக்கு இலவச விசாவால் பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor