உள்நாடு

திங்களன்று துக்க தினமாக அனுஷ்டிக்கவும் – ரிஷாத் கோரிக்கை

(UTV |  மன்னார்) – மன்னார் ஆயர் இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டுள்ள, மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை பேராயர் மதிப்புக்குரிய இராயப்பு ஜோசப் அவர்களின் பூதவுடலுக்கு மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (03) இறுதி மரியாதை செலுத்தினார்.

இதேவேளை, மன்னார் பிரதேச சபை தவிசாளர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் அன்னாரின் பூதவுடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் திங்கட்கிழமை அன்று மன்னார் மறை மாவட்டத்தின் ஓய்வு நிலை ஆயரின் இறுதி நல்லடக்கம் இடம் பெற உள்ளது.

அன்றைய தினத்தை மாவட்டத்தில் உள்ள மக்கள் மரியாதையின் நிமித்தம் தமிழ் முஸ்லிம் கத்தோலிக்க சிங்கள என அனைத்து மக்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் திங்கட்கிழமையை (5) துக்க தினமாக அனுஷ்டிக்க வேண்டும்.

மன்னார் மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி எமது துயரத்தை வெளிப்படுத்த வேண்டும்.

எனவே முஸ்லிம் சமூகமும் தமது வர்த்தக நிலையங்களை மூடி தமது பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

 

Related posts

சுகாதார தொழிற்சங்கங்கள் திங்கள் முதல் பணிப்புறக்கணிப்பில்

அரசியலமைப்பின் 21வது திருத்தம் : ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

எமது நாட்டின் முக்கிய உயிர்நாடியாக இருப்பது பெண்களே – மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor