உள்நாடு

திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்

(UTV | கொழும்பு) –  திங்கட்கிழமை முதல் கருப்பு வாரம்

நாட்டில் புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ அறிவித்துள்ளது.

இந்த புதிய வரி திருத்தம் தொடர்பாக ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ நடத்துவதற்கு மத்திய குழு ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.
அநியாயமான வரி அதிகரிப்புக்கு எதிராக நாளை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

மருந்துகள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு அரசாங்கத்தை சங்கம் கோரியுள்ளது. . இதனை தொடர்ந்து,
தமது கோரிக்கைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்காவிடின் தொழிற்சங்கப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

‘திவாலாகிவிட்ட அரசாங்கத்தால் செய்யக்கூடியது வரம்புக்குட்பட்டது என்பதை உணருங்கள்’

மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்!

நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி அநுர

editor