உள்நாடுவிசேட செய்திகள்

தாழமுக்கம் வலுவடைந்துள்ளது – பல பகுதிகளில் 100 மிமீ பலத்த மழை – மீனவர்களுக்கு எச்சரிக்கை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் நாளை (08) சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பகுதிகளில் விரித்தியடைந்துள்ள குறைந்த அழுத்தப் பிரதேசமானது தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தற்போது பொத்துவிலுக்கு தென்கிழக்காக சுமார் 700 கிலோமீற்ற தூரத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வடமேற்கு திசையில் நாட்டின் கிழக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே வடக்கு, வட மத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை நாளை (08) முதல் மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை காங்கேசன்துறையில் இருந்து திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான ஆழம் கூடிய மற்றும் ஆழம் குறைந்த கடற்பரப்புகளில் இன்று (07) முதல் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்வதையும் மீன்படி நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

ஐக்கியமும் இறை பிரார்த்தனையுமே சதிகாரர்களை தோற்கடிக்க சரியான மார்க்கம்

சந்திம வீரக்கொடிக்கு கொவிட் தொற்று உறுதி