உலகம்

தாய்வான் ரயில் விபத்தில் 34 பேர் பலி

(UTV |தாய்வான்) – தாய்வானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள சுரங்கப் பாதையில் இன்று ரயிலொன்று தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக ஆரம்ப கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

டைதுங் நோக்கி பயணிக்கும் இந்த ரயில், ஹுவாலியனுக்கு வடக்கே ஒரு சுரங்கப்பாதையில் தண்டவாளத்திலிருந்து இறங்கி, சுரங்கப்பாதையின் சுவருடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில் குறைந்தது நான்கு பேர் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. பலத்த காயங்களுடன் மூன்று பேர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 20 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த ரயில் சுமார் 350 பேரை ஏற்றிச் சென்றதாகவும், மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

பர்வேஸ் முஷாரப்பிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை இரத்து

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார் டொனால்ட் டிரம்ப்

editor

ஆப்கான் மக்களை புறக்கணிக்க வேண்டாம்