உலகம்

தாய்வான் நாட்டில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தாய்வான் நாட்டில் இன்றும் (27) இரண்டாவது முறையாகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் கடற்கரை நகரமான இலென் நகரில் இருந்து 32 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டு நேரப்படி இரவு 11.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவில் 7.0 ஆக பதிவான இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன.

இதனால் இரவு வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டதா? என்பது குறித்த விவரம் இதுவரை வெளியாகவில்லை.

இதவேளை தைவான் நாட்டின் தென்கிழக்கே தைதுங் கடலோர கவுன்டி பகுதியில் கடந்த 25ஆம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காசாவை விட்டு 263,000க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தான் சொகுசு விடுதியில் குண்டுத்தாக்குதல்

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்