உள்நாடு

தாய்வானில் முதன் முறையாக தயாரிக்கப்பட்ட நீர் மூழ்கி போர்க்கப்பல்!

(UTV | கொழும்பு) –

தாய்வானில் முதன் முறையாக நர்வால் என்ற நீர்மூழ்கி போர்க்கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு அங்குள்ள காஹ்சியுங் நகரில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வில் ஜனாதிபதி சாய்-இங்-வென் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில், தாய்வான் வரலாற்றில் இது முக்கியமான நாள் ஆகும் என தெரிவித்தார்.

இந்த நீர்மூழ்கி கப்பலானது 229.6 அடி நீளம், 26.2 அடி அகலம் மற்றும் 59 அடி உயரம் கொண்டது. இதில் 3 ஆயிரம் டொன் எடை வரையிலான பொருட்களை சுமந்து செல்லலாம். ஒருசில சோதனைகளுக்கு பின்னர் இந்த கப்பல் அடுத்த ஆண்டு நாட்டின் கடற்படையில் சேர்க்கப்படும் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மீனவர் பிரச்சினைக்கு தீர்வைக் கோரி பாராளுமன்றில் பிரேரணை கொண்டுவருகிறார் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor

கோடீஸ்வரர்களை ஏமாற்றிய நிதி நிறுவன உரிமையாளர்

உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வருவது மிகவும் இயல்பான விடயம் – இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

editor