வகைப்படுத்தப்படாத

தாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

(UDHAYAM, COLOMBO) – தாய்வானின் பிரபல நிறுவனங்களை பிரிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

தாய்வான் நியூஸ் இணையதளம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தியா மற்றும் நேபாளம் முதலான நாடுகளுக்கும் இந்தக் குழு விஜயம் செய்கிறது.

ஆடைத்துறை, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை பிரதிநிதித்துபவர்கள் இந்த வர்த்தக குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இம்மாதம் 4 ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்துள்ள தாய்வான் வர்த்தக குழு, எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இந்த மூன்று நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை

மிரியானை அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள்

நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்