உலகம்

தாய்லாந்திலும் கொரோனா தொற்றின் ஆதிக்கம்

(UTV | தாய்லாந்து ) – தாய்லாந்தில் கொவிட் -19 என அறியப்படும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 120 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனா தொற்று குறித்த தாய்லாந்து அரசாங்க செயற்பாட்டுக்குழுவின் ஊடகப்பேச்சாளரை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதன்படி, புதிதாக அடையாளம் காணப்பட்டவர்கள் உள்ளடங்களாக, தாய்லாந்தில் கொவிட் – 19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,771 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், தாய்லாந்தில் கடந்த மணித்தியாளங்களில், இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, அவை உள்ளடங்களாக 12 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையை 4ம் மட்ட எச்சரிக்கை மட்டத்துக்குள் தள்ளியது அமெரிக்கா

அரச மருத்துவமனையில் 111 குழந்தைகள் உயிரிழப்பு

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் 36,000 ஊழியர்கள் பணி இடைநீக்கம்