தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சான்விரகுல் இன்று (05) தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பைத் தொடர்ந்து அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, அரசியலமைப்பு நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப இந்தத் தேர்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.