பலாங்கொடை, மஸ்ஸன்ன பகுதியில் இளைஞர் ஒருவர் தனது தாயாரை தடியால் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த தாய் பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தால் கோபமடைந்த அவரது இளைய மகன், தனது தாயைத் தாக்கிய தனது சகோதரனைத் தாக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தில் தலை மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்ந தாயார் சுசிலா ரஞ்சனி (52) அறுவைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை பதிவுகள் குறிப்பிடுகின்றன.
