கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கொட்டவ பகுதியில் தாயும் மகனும் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
தாயும் மகனும் வீட்டிற்குள் இருந்தபோது இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
75 வயதுடைய பெண் ஒருவரும் 25 வயதுடைய ஆணுமே இவ்வாறு உயிரிழந்தவர்களாவார்கள்.
மேலும், குறித்த இளைஞன் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டி ஓட்டுநர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், கொலைக்கான காரணம் அல்லது கொலையை யார் செய்தார்கள் என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.