சூடான செய்திகள் 1

தாயினால் கைவிடப்பட்ட நிலையில் யானைக்குட்டி ஒன்று மீட்பு

(UTV|COLOMBO)-கிளிநொச்சி பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட நிலையில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான 5 மாதங்களே பூர்த்தியான யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி வனப்பகுதிக்கு அண்மையில் இந்த யானைக்குட்டியை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக்குட்டியை மீட்டுள்ளதுடன், வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களால் யானைக் குட்டிக்கு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.

கிளிநொச்சி வனப்பகுதியிலிருந்து இந்த யானைக்குட்டி வந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைக்குட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மீள ஆரம்பிக்கப்படும் களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கை!

சட்டவிரோதமாக புதையல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது

BREAKING NEWS – ஸூஹைலை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவிட்டார் நீதிவான்!

editor