உள்நாடு

தாதியர்கள் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறையில்

(UTV | கொழும்பு) – பதவி உயர்வு மற்றும் தாதியர் யாப்பில் மாற்றங்களை ஏற்படுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக தாதிய தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறிருப்பினும், கொரோனா வைத்தியசாலைகள், சிகிச்சை மையங்கள் மற்றும் விசேட வைத்தியசாலைகள் என்பனவற்றில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படமாட்டாது என அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

மேலும், அகில இலங்கை தாதியர் சங்கமும் இன்றும், நாளையும் சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக சங்கத்தின் செயலாளர் எஸ்.பி மெதிவத்த தெரிவித்துள்ளார்.

தாதியர் சேவையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் இதற்கு முன்னதாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில், சாதகமான முடிவுகள் கிடைக்காமை காரணமாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

கடலில் வீசப்பட்ட 839 கிலோ போதைப்பொருள் மீட்பு

editor

தலைமைப் பதவி தவிர்த்து ஏனைய பதவிகளில் மாற்றம்

editor

ஜகத் சமந்தவுக்கு பிணை