நூரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நூரியவத்தை 02 ஆம் பிரிவில் வசித்து வந்த 14 வயதான சிறுவனொருவன் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவல் ஒன்று தொடர்பில் நூரி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த சிறுவன் தாக்கப்படுவதாக நேற்று (02) இரவு நூரி பொலிஸ் நிலையத்திற்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதற்கமைய உடனடியாக செயற்பட்ட பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனையிட்டபோது, வீடொன்றுக்கு அருகில் குறித்த சிறுவன் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து அந்தச் சிறுவனை நூரி வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதிலும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலையின் வைத்தியர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த மரணம் சந்தேகத்திற்குரியது என்பதால், பிரேத பரிசோதனைக்காக சடலம் அவிசாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை நூரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
