அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தவறான தரவுகளின் அடிப்படையில் சஹஸ்தனவி LNG மின் உற்பத்தி நிலையத்திற்கான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது – சஜித் பிரேமதாச

சஹஸ்தனவி திரவப்படுத்தப்பட்ட இயற்கை வாயு மின் (LNG) நிலையத்தை கொண்டு நடத்துவதற்கு அரசாங்கம் அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ளது.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய தரவுகளில் பொய்யான விடயங்கள் காணப்படுகின்றன.

இந்த அமைச்சரவைப் பத்திரத்தின் பிரகாரம், ஒரு அலகு மின்சாரத்தின் விலை ரூ.20.15 ஆகும்.

ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ.110 ஆகவும், ரூபாவின் மாற்று விகிதம் ரூ.195 ஆகவும் இருப்பதை அடிப்படையாகக் கொண்டே இத்தகைய கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில், ஒரு லீட்டர் டீசலின் விலை ரூ. 286 ஆகவும், ஒரு டொலரின் விலை ரூ. 300 ஆகவும் அமைந்து காணப்பட்டன.

தவறான தரவுகளின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தை முன்வைத்து, சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு அனுமதியைப் பெற்று, நாட்டிற்கும் நுகர்வோருக்கும் பெரும் அடியைக் கொடுத்துள்ளனர். இது மிகவும் ஊழல் நிறைந்த செயல்முறை என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலைய மோசடி தொடர்பாக விசேட கூற்றொன்றை முன்வைத்து இன்று (04) வெளிக்கொணர்ந்த போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பிழை குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு எரிசக்தி அமைச்சின் செயலாளருக்கு எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.

3 சந்தர்ப்பங்களில் ரூ. 35.81, ரூ. 43.25 மற்றும் ரூ. 72.11 ஆக அமையலாம் என்பது குறித்துரைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பாரதூரமான விடயம் என்னவென்றால், விலை அலகுகளுக்கும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகளுக்கும் இடையிலான துல்லியமின்மை சுட்டிக்காட்டப்பட்டிருந்தாலும், இதனை முன்னெடுப்பதற்கு 2025 மார்ச் இறுதியில் இணக்கப்பாடு கைச்சாதிடப்பட்டுள்ளது.

தவறான தரவுகள் சமர்ப்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் அமைச்சரவையில் இருந்த ஏனைய அமைச்சர்கள் இது குறித்துத் தெரியாமலா இருந்தார்கள் என்ற விடயத்தில் பிரச்சினை காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே, இந்த அமைச்சரவைப் பத்திரம் தவறான தகவல்கள் மற்றும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்தத் தவறைச் சுட்டிக்காட்டியுள்ள சமயத்தில், இதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவர்கள் விரும்பியதைச் செய்து நாட்டிற்குக் கடுமையான இழப்பை ஏற்படுத்தியுள்ளனர். நுகர்வோருக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய தரப்புகளுடனும் கலந்துரையாடி, இந்தத் தவறினால் நாட்டிற்கு ஏற்படும் இழப்பைத் தடுக்க எடுக்க முடியுமான, எடுக்கத் தேவையான சகல ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மின்சார சபையினதும் LDL யினதும் தலைவர் ஒரே நபராக இருப்பதால் இங்கு மோதல்கள் காணப்படுகின்றன. இதற்கிடையே பிரச்சனை இருக்கும்போது இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பது வேண்டுமென்றே செய்யப்படும் தவறாகும்.

எனவே, இப்போதாவது இது குறித்து பரிசீலித்து, சஹஸ்தனவி மின் உற்பத்தி நிலையத் திட்டத்திற்குப் பதிலாக புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

Related posts

மீண்டும் துபாய் சென்றார் அலி சப்ரி ரஹீம்

தொடரும் குளிரான காலநிலை

நீர்வெட்டு தொடர்பில் கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

editor