உள்நாடு

தலைமன்னார் கோர விபத்தில் ஒருவர் பலி : பலர் கவலைக்கிடம்

(UTV | மன்னார்) – தலைமன்னாருக்கு அருகில் ரயிலுடன் தனியார் பேரூந்து மோதி விபத்துக்குள்ளானதில் 9 வயது மாணவர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 30 பேரில், 20 பேர் மாணவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

மன்னாரிலிருந்து தலைமன்னார் நோக்கி பயணித்த பேருந்து, ரயிலுடன் மோதி இன்று பிற்பகல் விபத்துக்குள்ளானதாக மன்னார் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த 24 பேர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

டொலரின் விலை வீழ்ச்சி !

ஊழல் ஒழிப்பு சட்டத்தில் திருத்தம் – அமைச்சரவை அங்கீகாரம்

editor

போக்குவரத்து சேவை முகாமைத்துவ செயலணியின் கலந்துரையாடல் இன்று