உள்நாடுசூடான செய்திகள் 1

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

(UTV | கொழும்பு) –புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 25 ஆம் திகதி ஆரம்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜ்ரி 1441 புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை நாட்டின் எந்தப்பாகத்திலும் தென்படாததால் ஷஃபான் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்து புனித ரமழான் முதல் நோன்பை நாளை மறுதினம் 25 ஆம் திகதி ஆரம்பிப்பதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மற்றும் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களம் ஆகியன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளன.

புனித ரமழான் தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (23) மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து நடைபெற்றது.இதன் போதே மேற்படி தீர்மானம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related posts

உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயத்தின் விலையில் வீழ்ச்சி

பிரதமருடன் அமைச்சர் ரிஷாட் வடக்குக்கு பயணம்

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்