உள்நாடு

தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு – கொழும்பு பெரிய பள்ளிவாயலின் அறிவிப்பு

ஹிஜ்ரி 1445 புனித ஷவ்வால் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு இன்று செவ்வாய்க்கிழமை (09) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற இருக்கின்றது.

இம்மாநாட்டில் கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் மற்றும் உலமாக்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

நாட்டின் எப்பிரதேசத்திலாவது ஷவ்வால் மாத தலைப்பிறை தென்பட்டால் தகுந்த ஆதாரங்களுடன் 0112432110, 0112451245, 0777316415 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை

editor

பங்களாதேஷ் நோக்கி விஷேட விமானம்

தமிழ் மக்கள் சங்கு சின்னத்துக்கு ஆதரவு வழங்க வேண்டும் – கருணாகரம் எம்.பி

editor