உள்நாடு

தற்போதைய நிலையில் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்

(UTV – கொழும்பு) – நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று(30) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் இது தொடர்பில் பேசிய அவர்,

“… கொரோனா வைரஸ் தொற்று நோய் நிலைமை காரணமாக தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் ஓரளவுக்கு சீர்குலைந்தாலும் நாடு தற்போது வழமை நிலைமைக்கு திரும்பி வருவதால் வலுவாக தேர்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியவற்றின் தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி அமோக வெற்றியை பெறும்..” என்றும் மைத்திரி நம்பிக்கை வெளிட்டுள்ளார்.

Related posts

200 அடி பள்ளத்தில் விழுந்து கார் விபத்து – மூவர் படுகாயம்

editor

ஐ.தே.கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று

ஈஸ்டர் தாக்குதல் – பிணைமுறி மோசடி சம்பவங்களின் மீள் விசாரணைகள் ஆரம்பம் – விஜித ஹேரத்

editor