அரசியல்உள்நாடு

தற்போதைய அரசாங்கம் விவசாயிகளின் வாழும் உரிமையை பறித்து விட்டது – சஜித் பிரேமதாச

சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரச்சினைகள் குறித்து பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வருவேன்.

இந்த விவசாயிகள் மானியங்களையோ அல்லது நிதி உதவியையோ கேட்கவில்லை, மாறாக பல தசாப்தங்களாக தாங்கள் பயிரிட்டு வரும் நிலத்தின் மீதான உரிமையைத்தான் கேட்கின்றனர்.

சோளம், தர்பூசணி மற்றும் வெண்டிக்காய் ஆகியவற்றை பயிரிடுகின்ற 5,000 முதல் 6,000 குடும்பங்கள், 25,000 ஏக்கரில் பல தசாப்தங்களாக பாரம்பரியமாக பயிரிட்டு வருகின்றனர்.

அவர்கள் தமது சேனைப் பயிர் செய்கையின் நிலத்துக்கான உரிமையைக் கோரி நிற்கின்றனர்.

இந்த விவசாயிகள் வாழும் உரிமை, வாழ்வாதாரம் மற்றும் விவசாயம் செய்யும் உரிமையைக் கோரி நின்ற போதிலும், இன்று அது பறிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மொனராகலை மாவட்டத்தில் உள்ள கொட்டியாகல 99 சந்திப் பகுதியில் இன்று (31) நடைபெற்ற கொடியாகல விவசாயிகளின் காணிப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடும் பொதுக் கூட்டத்தில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இந்தப் பிரச்சினைகளை ஆளும் தரப்பு அமைச்சர்களிடம் கொண்டு வரப்படும்போது, ​​அவர்கள் அபத்தமான பதில்களை வழங்குகின்றனர்.

இந்தப் பிரச்சினைகளை மாவட்ட அபிவிருத்திக் குழு மூலம் தீர்த்துக் கொள்ளுமாறு அமைச்சரவை அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த உரிமையைப் பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும். ஜனநாயக முறையில் இதற்காக முடிந்தவரை உரத்த குரலை எழுப்பும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்து, அரசாங்கத்திற்கு சுமை கொடுக்காது சுதந்திரமான வாழ்க்கையை இம்மக்கள் முன்னெடுத்து வாழ்ந்தாலும், இன்று தீர்வுகளை வழங்காமையால் இம்மக்களை ஏழ்மை நிலைக்கு இந்த அரசாங்கம் தள்ளி வருகின்றது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

சீன உர நிறுவனம் நஷ்டஈடு கோரி கடிதம்

ஐக்கிய தேசிய கட்சியின் மறுசீரமைப்பை ஆரம்பித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் – நாடு திரும்பியதும் அதிரடி நடவடிக்கை

editor

திஸ்ஸ நாகொடவிதான காலமானார்