அரசியல்

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் – ரணில்

தற்போதைய அரசாங்கம் இந்தியாவுடனான உறவை வலுப்படுத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்திய ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் நகருக்கு விஜயம் செய்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அந்நகரில் அமைந்துள்ள பழைய கோட்டை உட்பட பல அரச மாளிகைகளுக்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தியாவின் தூய்மையான நகரங்களின் தரவரிசைப்படி இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரமாக கருதப்படுகிறது.

Related posts

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா எம்.பி – பிடியாணையை மீளப்பெற உத்தரவு

editor

கங்காரு சின்னத்தில் போட்டி – காதர் மஸ்தான் வேட்புமனுத் தாக்கல் செய்தார்

editor