உள்நாடுவணிகம்

தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ள Cap Snap Lanka

Cap Snap Lanka தனியார் நிறுவனம் Sri Lanka association for the advancement of Quality and Productivity (SLAAQP) அமைப்பு ஏற்பாடு செய்த 2025 தர நிர்ணயம் மற்றும் உற்பத்திதிறன் தேசிய சம்மேளனத்தின் 04 தங்கப் பதக்க விருதுகளை வென்றுள்ளதோடு அதன் இணை நிறுவனமான American Polymers தனியார் நிறுவனம் வெள்ளிப்பதக்க விருதை வென்றுள்ளது.

கிறிஸ்டல் QCC2510276), இனோ காடியன்ஸ் (QCC2510278), பர்பெக்ட் பைன்டர்ஸ் (QCC2510280), கிளெரிட்டி அச்சீவர்ஸ் (QCC2510279) ஆகிய தரக் கட்டுப்பாட்டு வட்டங்கள் பெற்றுள்ள முன்னேற்றத்துக்கே Cap Snap Lanka நிறுவனத்துக்கு தங்கப் பதக்க விருதுகள் கிடைத்துள்ளன.

American Polymers நிறுவனத்தின் கவுன்டிங் ஆர்க் தரக் கட்டுப்பாட்டு வட்டம் (QCC2510272) வெள்ளிப் பதக்க விருதை வென்றுள்ளது
2003 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட Cap Snap Lanka நிறுவனம் இன்றளவில் நாட்டின் முன்னணி பொதியிடல் தீர்வுகளை வழங்குமொரு நிறுவனமாக பெரு வளர்ச்சி அடைந்துள்ளது.

மேற்படி நிறுவனம் குடிநீர், தேயிலை, பெயின்ட், மருந்துகள், பால், பல்வேறு பான வகைகள், உணவுக்காக பெறப்படும் எண்ணெய் மற்றும் டிடெர்ஜன்ட் போன்ற பல்வேறு கைத்தொழில் துறைகளுக்கு பொதியிடல் வசதிகளை வழங்குகிறது.

மேற்படி நிறுவனத்துக்குச் சொந்தமான நவீன கைத்தொழிற்சாலைகள் ஹோமாகம மற்றும் ஆட்டிகல பிரதேசங்களில் அமைந்துள்ளன. அவற்றின் முழு பரப்பளவு 300000 சதுர அடிகளாகும்.

1000 இற்கும் மேற்பட்டோருக்கு நேரடி தொழில் வாய்ப்புகளை வழங்கியுள்ள இந் நிறுவனம் மேலும் 5000 இற்கும் மேற்பட்டோருக்கு மறைமுக வருமான மூலங்களை உருவாக்கியுள்ளது. 250 இற்கும் மேற்பட்ட முன்னணி வர்த்தகநாமங்களுக்கு இந் நிறுவனம் சேவைகளை வழங்குகிறது.

இலங்கையில் மிகக் குறைவான நிறையுடைய PET போத்தல்களை உற்பத்தி செய்து வரும் இந் நிறுவனம் மறுசுழற்சி கட்டமைப்பை கொண்ட நாட்டின் ஒரே பொதியிடல் உற்பத்தி நிறுவனமுமாகும்.

இந் நிறுவனம் 50% இற்கும் மேற்பட்ட மின்சாரத்தை சேமிக்கவல்ல அதிவேக உற்பத்தி செயற்பாடொன்றையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

மிகக் குறைவான மனித உழைப்பே தேவைப்படும் முழுமையான தானியங்கி செயற்பாட்டின் கீழ் உற்பத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இந் நிறுவனம் சகல உற்பத்திகளினதும் தரத்தை உறுதிப்படுத்துகிறது.

Cap Snap Lanka மற்றும் American Polymers நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விருதுகள் பலவற்றை வென்றுள்ளது.

FSSC 22000, ISO 22000, ISO 14001, ISO 9001, HACCP மற்றும் GMP ஆகிய உற்நாட்டு மற்றும் சர்வதேச தரச் சான்றிதழ்களையும் இந் நிறுவனம் பெற்றுள்ளது.

Related posts

பலாத்கார பிரேத எரிப்பை நிறுத்துமாறு ஆர்ப்பாட்டம் [VIDEO]

இராணுவ கெப் வண்டி விபத்தில் இராணுவ அதிகாரி பலி

 பற்றாக்குறையாக மருந்துகளின் பட்டியல் வெளியானது