(UTV | அழுத்கம) – கடந்த மே மாதம் 25ம் திகதி அழுத்கம – தர்கா நகர் பகுதியில் ஒஸ்டிசம் குறைப்பாடுடைய 14 வயதான சிறுவர் ஒருவர் பொலிஸாரினால் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அழுத்கம பொலிஸ் நிலைய உயர் அதிகாரி ஒருவர் எமது செய்தித் சேவைக்கு தெரிவித்தருந்தார்.
களுத்துறை பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரி கொண்;ட குழுவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 25ம் திகதியன்று சைக்கிளில் பயணித்த வேளையில் அவர் பொலிஸ் சோதனை சாவடி ஒன்றில் வைத்து தாக்கப்பட்ட சிசிடிவி காணொளி பதிவுகளும் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள நிலையில் பல தரப்பினரும் இதற்கு கண்டனங்களையம் முறையான நீதியையும் கோரி வருகின்றனர்.
குறித்த காணொளி:
